உலக பணவீக்க பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்..! (படம்)
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உலகப் பொருளாதார நிலை குறித்த மாதாந்த பணவீக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பணவீக்க அறிக்கையின்படி இலங்கை இம் மாதம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த மாதம் இரண்டாம் இடத்தில்
இருந்த இலங்கை கடந்த மாதம் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை இந்த மாதம் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த மாதம் மூன்றாவது இடத்தில் இருந்த துருக்கி இந்த மாதம் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
தொடர்ந்தும் முதலிடத்தில் சிம்பாப்வே
சிம்பாப்வே தொடர்ந்தும் பணவீக்க சுட்டெண்ணில் முதலாவது இடத்தில் இருந்து வருகிறது, அந்த நாட்டின் பணவீக்கம் 191.60 வீதமாக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானின் பணவீக்கம் 21 வீதமாக பதிவாகியுள்ளதுடன் அந்த நாடு பணவீக்க சுட்டெண்ணில் 12 வது இடத்தில் உள்ளது.
ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான ஸ்டீவ் ஹென்க்கின் பணவீக்க சுட்டெண் உலகில் பிரதானமான பணவீக்க ஆய்வு அளவுகோலாக கருதப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
