40 இலட்சம் மக்கள் வறுமையில் - தொடரும் மோசடி! சஜித் சுட்டிக்காட்டு
Parliament of Sri Lanka
Sajith Premadasa
Sri Lanka Economic Crisis
By Mohankumar
எமது நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
லிர்னே ஆசியா நிறுவனம் வெளியிட்ட அண்மைய தரவு அறிக்கையை (9) இன்று நாடாளுமன்றத்தில் சமரப்பித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட 40 இலட்சம் பேர்வரை அதாவது மொத்த சனத்தொகையில் 17 சதவீத மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர் எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
தரவு அறிக்கை
மேலும் அவர் குறிப்பிடுகையில், “40 இலட்சம் பேர் வறுமையில் வாடும் போது, நைட்ரஜன் உர மோசடி, மலக்கழிவு உர மோசடி போன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இம்மோசடிகளில் ஈடுபட்ட சகலரையும் தகுதி தராதரம் பாராமல் சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”
என்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்