இலங்கையில் எந்த கட்சி வெற்றி பெறும்; தேர்தல் தொடர்பில் வெளியானது புதிய கருத்து கணிப்பு!
இலங்கையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் எந்த கட்சி வெற்றி பெரும் என கருத்து கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சிக்கு அதிகமான வெற்றி வாய்ப்புக்கள் காணப்படும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடத்தப்பட்ட மிகவும் இரகசியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
வெற்றி யாருக்கு?
கருத்து கணிப்பு முடிவுகளின் இலங்கையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறுதி தேர்தல் முடிவுகளின் படி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 51 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெரும் என குறித்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்ட பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்து பேச்சு வார்த்தைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
