தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த ஆர்வம் காட்டும் ரணில்! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் (காணொளி)
அதிபர்த் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை பேசு பொருளாக மாற்றுவதற்கு தென்னிலங்கை அரசாங்கமும் ரணில் விக்ரமசிங்கவும் முயற்சி செய்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (28) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கை ஊடகங்கள்
தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை மிகவும் பேசும் பொருளாக மாற்றுவதற்கு தெற்கினுடைய அரசாங்கமும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
தமிழ் வேட்பாளர் விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து அவதானித்து வருகின்றன.
அது தொடர்பில் தொலைபேசி ஊடாக என்னிடம் பல அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதனை பார்க்கும் போது தெற்கிலே இருக்கும் பேரனிவாத சக்திகள் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதன் ஊடாக அதனை பிரபல்யப்படுத்துவதாக தெரிகிறது.
சர்வஜன வாக்கெடுப்பு
இதற்கு பின்னணியில் உள்ளவிடயங்களை நாம் பேசியாகவேண்டும். தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு.
அதிபர் தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இன்றி தனியே சிங்கள மாக்களது வாக்குகளினால் மட்டு ஒருவர் அதிபராக தெரிவு செய்யப்படலாம் என்ற நிலை காணப்படும் போது தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்களுடைய விடயங்களை முன்னிறுத்தி அதற்கு ஆணைகோரும் சர்வஜன வாக்கெடுப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதனை நாங்கள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |