தொடர் மக்கள் போராட்டத்தின் மத்தியில் கோட்டாபய வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
ஊழல் நிறைந்த அமைச்சரவை காரணமாக தன்னால் எதனையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாமல் போனதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஊழல் அமைச்சர்களினால் தான் சிக்கலில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நல்ல தொலைநோக்குப் பார்வையும், நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டமும் தமக்கு இருந்த போதிலும் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோட்டாபய பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலைமையில் கோட்டாபய அவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
