கோட்டாபய நாடு திரும்பும் நிலையில் - சிறிலங்கா படையினருக்கு ரணில் பிறப்பித்த விசேட உத்தரவு!
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு, சிறிலங்கா படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில், பொது மக்களின் அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்தை பயன்படுத்திய ரணில்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகரங்களை கொண்டு அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பிலான உத்தரவையே விசேட வர்த்தமானி மூலம் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டாபயவின் வீட்டிற்கு தீவிர பாதுகாப்பு
இதேவேளை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.