ரணிலின் தந்திரத்திற்கு விலை போயுள்ள கூட்டமைப்பு - தமிழ் மக்களின் உரிமைகளையும் விலை பேசாதீர்கள்!
கூட்டமைப்பு, பல நாடுகளின் அழுத்தத்தின் காரணமாகவே இணைந்து இருந்ததாகவும் வருங்காலங்களில் அவர்கள் தனித்து செயற்படட்டும் எனவும் ஒரு குடையின் கீழ் இருந்து தமிழ் மக்களின் உரிமைகளை விலை பேச வேண்டாம் என்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை காலமும் தமிழ் தேசியகூட்டமைப்பினர் ஒன்றிணைந்திருந்து தமிழர்களுக்காக ஒன்றும் செய்ததில்லை. ஆகவே வருங்காலங்களிலும் கூட்டமைப்பு இணைந்திருப்பதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை எனவே பிரிந்து செல்வதே நல்லது எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.
பிரிவே சரியானது
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசியல் தந்திரமிக்க ஒருவர் முன்பு விடுதலைப்புலிளை பிரித்தார் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தியுள்ளார்.
பிளவுபடுத்திய ரணில்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்திருந்தால் அதிபர் கூறியிருந்தது போல குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்வுகளை வழங்கவேண்டிய நிலை ஏற்படும் என்ற காரணத்தால் கூட்டமைப்பை பிளவு படுத்தியுள்ளார். இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் விலைபோயுள்ளனர்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
