போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ரணிலின் முக்கிய அறிவிப்பு!
நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் தான் அதிபராக பதவியேற்றதாகவும், பொருளாதார சவால்களை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு நேற்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டபோதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு சகலருக்கும் அனுமதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு உரிமையுண்டு

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அதே உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது.
ஆகவே அதனை தானும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.