ராஜபக்சவினரை விட மோசமான சர்வாதிகாரியே ரணில் - ஹிருணிகா ஆவேசம்!

Ranil Wickremesinghe Sri Lanka Hirunika Premachandra SL Protest President of Sri lanka
By Kalaimathy Aug 20, 2022 09:31 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மிக மோசமான சர்வாதிகார ஆட்சியாளர் என ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் பல்லைக்கழக மாணவர்கள் கூட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

குற்றவியல் விசாரணை திணைக்களம் விடுத்த அழைப்புக்கு அமைய இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த போதே ஹிருணிகா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 

“என்னை விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு வந்து அழைப்பாணை ஒன்றை வழங்கினர். அதில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. போராட்டம் சம்பந்தமாக என்னை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவே நினைக்கின்றேன்.

காரணத்தை அறிந்தே வாக்கு மூலம் வழங்குவேன்

ராஜபக்சவினரை விட மோசமான சர்வாதிகாரியே ரணில் - ஹிருணிகா ஆவேசம்! | Sri Lanka President Ranil Rajabaksha Hirunika

இந்த போராட்டத்தின் புண்ணியத்தில் தான் தற்போதைய அதிபர் பதவிக்கு வந்தார். இவ்வாறான நிலையில், போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏதேனும் ஒரு காரணத்திற்காக அழைத்து விசாரணை நடத்துகின்றனர்.

ஆனால் என்னை எதற்காக அழைத்திருக்கின்றனர் என்று போய் பார்ப்போம். காரணம் என்னவென்று அறிந்து நான் எனது வாக்குமூலத்தை வழங்குவேன். ஆனால் எமது போராட்டம் அமைதியாக முன்னெடுக்கப்பட்டது.

எங்களால் எவருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. தொந்தரவு ஏற்பட்டது என்றால், ராஜபக்சவினருக்கே ஏற்பட்டது. அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க நேரிட்டது. சாதகமான நிலைமை ஏற்பட்டது என்றால், அது ரணில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டது.

அவர் முன்னெடுத்து வரும் இந்த அடக்குமுறையை நாங்கள் அருவருப்புடன் கண்டிக்கின்றோம். வசந்த முதலிகே நேற்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரமான சர்வாதிகாரி

ராஜபக்சவினரை விட மோசமான சர்வாதிகாரியே ரணில் - ஹிருணிகா ஆவேசம்! | Sri Lanka President Ranil Rajabaksha Hirunika

அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். பயங்கரவாத யுத்தம் 2009 ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. பல்கைலைக்கழக மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது கவலைக்குரிய விடயம்.

இதுவரை உருவான அனைத்து ராஜபக்சவினரை விட, இதுவரை ஆட்சிக்கு வந்த அதிபர்களை விட இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ரணில் ராஜபக்ச மிக மோசமான சர்வாதிகாரமான ஆட்சியாளர்.

இது வரலாற்றில் பதிவாகும். இதுதான் உண்மையான கதை ரணில் விக்ரமசிங்கவுடன் எனக்கு இருந்து வந்த நட்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது” எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். 

ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022