ஜனாதிபதி தேர்தல் : ரணிலின் தோல்வி : அநுரகுமாரவின் வெற்றி: வெளியானது காரணம்
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கும் அநுரகுமாரவின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதை விளக்குகிறார் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் உமாபதி.
ஐபிசி தமிழ் மெய்ப்பொருள் நிக்ழ்ச்சிக்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் மிகப்பெரிய ஜனநாயக புரட்சி ஒன்று நடைபெற்றுள்ளது.இந்த நூற்றாண்டின் இலங்கையின் மிகப்பெரிய அரசியல்வாதி யார் என்றால் அது ரணில் விக்ரமசிங்கதான்.நாடு இக்கட்டான நிலையில் இருந்தபோது நாட்டை ரணிலிடமே கையளித்தனர்.
ஆனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு என்பது தேர்தல் அரசியலில் கிடையாது.இலங்கையில் இடம்பெற்ற பெரும் மாற்றங்களுக்கு எல்லாம் வித்திட்டவர் ரணில்.
அவர் தனிப்பட்ட ரீதியில் ஊழல்வாதி அல்ல.ஆனால் ஊழல்வாதிகளுடன் மிகப்பெரிய கூட்டாளிகளாக இருந்துள்ளார்.அதனுடைய விளைவே இன்று அநுர குமார திஸநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காரணமாகும்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |