மீண்டுமொரு புரட்சிக்கு தயாராகிறதா தென்னிலங்கை - பெருமளவில் திரண்ட பிக்குகள்!
கொழும்பில் பௌத்த பிக்குகள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
ஸ்ரீ போதிராஜா மாவத்தையின் முன்பாக தற்போது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிக்குகள் ஆர்ப்பாட்டம்
அவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நாட்டில் அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பதாதைகளை ஏந்திவாறு தொடரும் போராட்டம்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பிக்குகள் கலந்து கொண்டுள்ளதுடன், தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கி பதாதைகளையும் ஏந்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/0787995d-7fd7-4764-a6be-b7ec97686520/22-6319d603c277d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/46b19d25-6368-4a48-a5a3-1c9ea163dbae/22-6319d60422228.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c460b428-ae73-48dc-997e-eb6e7122f75f/22-6319d60470212.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c3ec1853-a336-4ac1-9b14-864cad586c4c/22-6319d604c2f8b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/75a9187b-af45-4dd0-bdfb-95bba8b6fe7f/22-6319d6052b3a4.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)