சிறிலங்காவிற்கு பிரித்தானியா விடுத்துள்ள காட்டமான கோரிக்கை!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவது மனித உரிமை சம்பந்தமான விடயத்தில் பொருத்தமற்றது என சிறிலங்காவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது..
அதேவேளை இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு இட்டுள்ளது. மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவது மனித உரிமை சம்பந்தமாக பொருத்தமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கு முரணானது
Concerned about reported use of the Prevention of Terrorism Act. #PTA is seen as inconsistent with respect for human rights. We urge authorities to stand by their commitments to stop its use.
— UK in Sri Lanka ???? (@UKinSriLanka) August 22, 2022
அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகளுக்கு முரணானதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

