பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாமின் தலைமை அதிகாரி யார்.... வெளியாகியது தகவல்
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By S P Thas
பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் தலைமை அதிகாரியாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க விரைவில் நியமிக்கப்படக்கூடும் என்று அலரி மாளிகை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் தலைமை அதிகாரி அல்லது அதற்கு சமமான பதவியொன்றில் அவர் நியமிக்கப்படக் கூடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் தலைமை அதிகாரியாகவும் சாகல ரத்நாயக்க பதவி வகித்திருந்தார்.
இதேவேளை, இம்முறை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டபின் கூட்டப்பட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போதும் பிரதமருக்கு அடுத்த ஆசனத்தில் சாகல ரத்நாயக்கவே அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
