வன்முறைகளிலிருந்து உடனடியாக விலகாவிடில் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் - சிறிலங்கா படையினர் எச்சரிக்கை!
Sri Lanka Army
Sri Lanka
SL Protest
Galle Face Riots
By Kalaimathy
வன்முறைகளிலிருந்து உடனடியாக விலகிக்கொள்ளுமாறும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சிறிலங்கா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சிறிலங்கா இராணுவத்திற்கு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் ஊடகப் பிரிவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே ஆயுதப்படைகளுக்கு சட்டப்பூர்வமாக இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
மேலும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் இராணுவம் தங்களது பலத்தை பிரயோகிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
