மீண்டும் ஒரு பாரிய போராட்டம் வெடிக்கும் - விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!
மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை எதிர்காலத்தில் மிகப் பெரியளவிலான போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்பதாக சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் போராட்டம் முடிந்து விட்டது என எவராவது நினைத்தால், அது முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருடர்கள் அல்ல
மேலும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரும் திருடர்கள் அல்ல. ஒரு சிலரது கொள்ளையடிப்புகள் காரணமாக முழு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது பலனளிக்காத விடயம் எனவும்தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, இளைஞர்களுக்காக நாட்டிலும் நிர்வாகத்திலும் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை என்பதே இதற்கு காரணம்.
எனினும் கல்வியை புதிதாக உருவாக்கி, திறமையில் முழுமை பெற்ற அணியை உருவாக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் விமர்சித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

