ரணிலை பதவி விலகக்கோரிய போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சிறிலங்கா பிரதமர் அலுவலகத்துக் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ளவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - ஃப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் தற்போது போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். இன்று காலை முதல் குறித்த அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாடத்தின்போது, காயமடைந்த 24 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.