வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியல்..! இலங்கைக்கு கிடைத்த இடம்
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
சார்க் நாடுகளில் மிகவும் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடாக மாலைதீவு காணப்படுவதுடன் இங்கு ஒரு நபருக்கு 840.4 டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர செலவுகள்
கொழும்பு நகரில் வசிக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசதியாக வாழ்வதற்கான வாடகையைத் தவிர்த்து மாதாந்திர செலவுகள் 570,997 ரூபாய் ஆகும்.

தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர் அல்லது வாடகையைத் தவிர்த்து 153,899 ரூபாய் செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதில் குழந்தை பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், சுற்றுலா, உணவு, பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள், வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
அதிக வரிகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய இரண்டாலும் மக்கள் சுமையைச் சுமந்து வருவதால், மத்திய வங்கியின் 'வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு 2024', தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டை (NCPI) அடிப்படையாகக் கொண்டு, மதிப்பிடப்பட்ட சராசரி மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு 2023 இல் ரூ. 103,383 இலிருந்து 2024 இல் ரூ. 105,063 ஆக 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது.

2021 உடன் ஒப்பிடும்போது 2022 இல் பதிவான 74.9 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க தளர்வை எடுத்துக்காட்டுகிறது.
அதே போல் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் 16.5 சதவீத அதிகரிப்பையும் இது எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |