முதல் முறையாக அதிகரித்த இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு!!
புள்ளிவிபரங்களின் படி இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக உயர்ந்துள்ளதாக என தெரிய வருகிறது.
கடந்த மார்ச் மாதம் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1812 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் அந்நியச் செலாவணி கையிருப்பு 1920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தது என மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாத இறுதியில் 108 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வரம்பு அதிகரிப்பு
இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டின் கடன் உச்சவரம்பை மேலும் ஒரு டிரில்லியனால் உயர்த்துவதற்கான பிரேரணை நேற்று (7) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்ச்சியாக பணம் அச்சிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இலங்கையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.