மேற்குலகை வளைக்கும் சிறிலங்கா..! புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழுத்தம்
ஐ.நா மனித உரிமைப் பேரவை உட்பட்ட மையங்களில் சிறிலங்காவுக்கு குடைச்சல் கொடுக்கும் மேற்குலக நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.
அவ்வாறாக, தன்மீது அழுத்தங்களை கொடுக்கும் பிரித்தானியாவை வளைத்தெடுக்கும் வகையில், புதியதொரு நகர்வை கொழும்பு அதிகாரம் மையம் எடுக்க முனைவதன் அடிப்படையில், சிறிலங்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இன்று லண்டனில் மூலோபாய பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
மூலோபாய பேச்சுவார்த்தை
லண்டனில் உள்ள வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி பணியகத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.
இதில், சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜயவர்தனவும், பிரித்தானிய தரப்பில் இலங்கை விடயங்களை கையாளும் அமைச்சர் ரவலியன் உட்பட்ட குழுவும் கலந்துகொண்டது.
இந்தப் பேச்சுக்களின் போது சிறிலங்கா தனக்குரிய ஆதாயங்களையும் இலங்கையில் விரைவில் வெளிப்படுத்தப்படவுள்ள நல்லிணக்க மாயமானுக்கு பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புகளை இழுத்தெடுக்கும் வகையிலான வியூகங்களும் போடப்பட்டதாக தெரிகின்றது.
இரட்டை நிலைப்பாடு
இந்தப் பேச்சுக்களுக்கு பக்கவாட்டாக பொதுநலவாய உதவிச் செயலாளர் நாயகத்துடனும் சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் விசேட சந்திப்புகளை நடத்தியமை விசேட அம்சம்.
இலங்கை விடயத்தில் பிரித்தானியா இரட்டை நிலைப்பாடுகளை நகர்த்த முனைவதான விமர்சனங்கள் வெளிப்படும் நிலையில், இன்று லண்டனில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)