சஜித்திற்கு பகிரங்க சவால் விடுத்துள்ள ஹரின் - பதவி துறக்கத் தயார்!
Sajith Premadasa
Sri Lanka
Harin Fernando
Sri Lanka Fuel Crisis
By Kalaimathy
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சஜித்தின் அறிவிப்பு
மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே நாட்டு நலன் கருதி அவர் இதனை செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஹரினின் சவால்
மேலும் சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
