இலங்கையின் தற்போதைய நிலை -ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka
Gota Go Gama
Russian Federation
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சக்கரோவா தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அதன் உள்விவகாரம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் அந்த நாட்டின் அரசியல் நெருக்கடியான நிலை சுமுகமாக தீர்க்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
நிலைமை வழமைக்குத் திரும்பும்
“புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம், அதற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம். நிலைமை வழமைக்குத் திரும்பும் என்றும், இலங்கையின் புதிய அதிகாரிகள் தேசியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

