விடுதலையானதும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ரஞ்சன்!
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
இவர் விடுதலையானதும் வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் சம்பந்தமான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே இரண்டு வாரங்கள் தங்கியிருப்பதற்காக அவர் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஞ்சன் ராமநாயக்க நேற்று அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் ஏழு ஆண்டுகள் அவர் அரசியலில் ஈடுபட முடியாது தடையேற்பட்டுள்ளது.
விரைவில் ரஞ்சனுக்கு முழுமையான விடுதலை
இதனால் அவர் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனினும் அரசியலில் ஈடுபடுவதற்கு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது அவருக்கு அதிபரின் முழுமையான பொது மன்னிப்பு கிடைக்கவில்லை. எனினும் தேவையான சந்தர்ப்பத்தில் தேர்தலில் போட்டியிட இடமளிக்க முடியும்.
இதற்கு முன்னர் சரத் பொன்சேகாவுக்கும் இரண்டு தடவைகளிலேயே அதிபரின் முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. முதலில் தண்டனை இரத்துச் செய்யப்பட்டது.
பொது மன்னிப்பில் விடுதலை
அதன் பின்னர் முழுமையான விடுதலை வழங்கப்பட்டது. இதேபோல் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்படலாம் எனவும் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கியது.
தண்டனைக் காலம் ஒரு வருடமும் 7 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
அதேவேளை

