சீன கொள்கையை ஆதரிக்கும் இலங்கை - அலிசப்ரி பகிரங்கம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
இலங்கை எப்போதும் ஒரு சீன கொள்கையை உறுதியாக ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
சீனாவில் சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என தெரிவித்துள்ள அலி சப்ரி சீனாவின் தன்னலமற்ற உதவியை இலங்கை பாராட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதலீடு
சீன நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
இலங்கையும் சீனாவும் ஒருவரையொருவர் எப்போதும் ஆதரித்துள்ளன என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் சகவாழ்வு பரஸ்பரம் நன்மைக்குரிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான உதாரணமாக திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
