சட்டவிரோத பண சேகரிப்பில் ஈடுபட்ட அதிபரும் அபிவிருத்தி சங்கமும்!

Sri Lanka Central Province Sri Lankan Schools
By Kalaimathy Jan 21, 2023 10:03 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை அதிபர் ஒருவரும் பாடசாலை அபிவிருத்திக் குழுவும் புறக்கணித்துள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

நுவரெலியா மாவட்டம், வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சில்வர் கண்டி தமிழ் வித்தியாலயத்தில் பயிலும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு கௌரவிப்பு விழாவினை நடத்துவதற்கு பெருந்தொகை பணம் மாணவர்களிடமே அறவிடப்பட்டுள்ளது.

சில்வர்கண்டி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11இல் பயிலும் 46 மாணவர்கள் மற்றும் கடந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 13 மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நிகழ்விற்காக குறித்த மாணவர்களிடம் தலா 3,000 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளது.

கட்டாயப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள்

சட்டவிரோத பண சேகரிப்பில் ஈடுபட்ட அதிபரும் அபிவிருத்தி சங்கமும்! | Sri Lanka Teachers Union Governmen Education Leave

இதற்கமைய 177,000 ரூபாய் பணம் மாணவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனைவிட குறித்த நிகழ்வு இந்த மாதம் 11ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன் அன்றைய தினம், 6,7,8 ஆகிய தரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த நிகழ்விற்காக குறித்த தரங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டுமென அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி ஆரம்ப பிரிவு ஆசிரியர்களை பாடசாலைக்கு வருகை தருமாறு அதிபர் கட்டாயப்படுத்தியுள்ள போதிலும், இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை இந்த கௌரவிப்பு நிகழ்வில் பிரதேச அரசியல்வாதி ஒருவர் அதிதியாக பங்கேற்றமை குறித்தும் மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மாணவர்களை கௌரவிக்கும் பாடசாலை நிகழ்வில் பற்கேற்றமை ஏன் என மாணவர்களின் பெற்றோரும், சமூக செயற்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். பாடசாலை மாணவர்களிடம் பெருந்தொகை பணம் அறவிடப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியமை தொடர்பில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் காஞ்ஞாதேவி கிருபாகர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பண அறவீடு

சட்டவிரோத பண சேகரிப்பில் ஈடுபட்ட அதிபரும் அபிவிருத்தி சங்கமும்! | Sri Lanka Teachers Union Governmen Education Leave

மேலும் பாடசாலை நிகழ்வில் அரசியல்வாதி ஒருவர் பங்கேற்றமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்களின் பிள்ளைகளிடம் இவ்வாறான “அவசியமற்ற” ஒரு விழாவிற்கு மிகப்பெரிய தொகை பணத்தை அறவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆசிரியர் வேலு இந்திரசெல்வன் தெரிவிக்கின்றார்.

பாடசாலை நிதி சேகரிப்புகள் தொடர்பில் சுற்றுநிருபங்கள் காணப்படுகின்றபோதிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கங்கள் அதனைப் பின்பற்றுவதில்லை எனவும் ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

தன்னிச்சையான தீர்மானம்

சட்டவிரோத பண சேகரிப்பில் ஈடுபட்ட அதிபரும் அபிவிருத்தி சங்கமும்! | Sri Lanka Teachers Union Governmen Education Leave

பெரும்பாலான பாடாசலைகளின் அபிவிருத்தி சங்க நிர்வாக அதிகாரம் பணபலம் படைத்த வர்த்தகர்களின் கைகளில் காணப்படுவதால் அவர்கள் பண அறவீட்டு விடயத்தில் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் இதனால் வறிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் பெற்ற கடனுக்கான வட்டியை வங்கிகள் அதிகரித்தவுடன் அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய ஆசிரியர்களும், அதிபர்களும் பெருந்தோட்ட மாணவர்களின் பொருளாதார நிலைமை தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டுமெனவும் ஆசிரியர் வே. இந்திரசெல்வன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி