கனடா விவகாரத்தில் நமது ஆதரவு இந்தியாவிற்கே..! இலங்கை கூறிய காரணம்
கனடாவிற்கு இந்தியாவிற்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மலிந்தமொராகொட கூறியுள்ளார்.
கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் திகதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கையின் நிலைப்பாடு
இந்த கொலை சம்பவத்துக்கு இந்தியா மீது குற்றம் சுமத்திய கனடா இந்திய தூதுவ அதிகாரியை வெளியேற்றியது.
இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்து சென்றது.
இந்த நிலையில், சீக்கிய செயற்பாட்டாளர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளிற்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது என மலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.
நாங்கள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
YOU MAY LIKE THIS