2024 இல் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,037,960 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் டிசம்பர் மாதத்தின் 29 நாட்களில் மாத்திரம் 233,087 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இந்த வருடத்திற்கான 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கினை இலங்கை அடைந்துள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள்
மேலும் கடந்த ஆண்டில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 414,798 ஆகும்.
அத்துடன் கடந்த வருடத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ரஷ்யா (Russia)இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 198,601 ஆக பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் பிரித்தானியாவில் (UK) இருந்து 177,121 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |