சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ
இலங்கைக்கு இந்த மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு பயணம் செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைந்தளவில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர்.
அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகள்
இந்த நிலையில், 4 ஆண்டுகளின் பின்னர், தற்போது இந்த மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை இலங்கை கொண்டிருந்த நிலையில், தற்போது ஆண்டின் இறுதியில் குறித்த இலக்கை எட்ட முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tourist arrivals pass 200,000 in December highest arrival for the last four years in one month total arrivals will be almost close to 1.5 million which was the original target set in Jan 2023. #visitsrilanka #srilankayoullcomebackformore
— Harin Fernando (@fernandoharin) December 30, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |