மேலுமொரு கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!!
Sri Lanka Economic Crisis
Sri Lanka Cabinet
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kanna
தொடருந்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தினால் இலங்கை தொடருந்து திணைக்களத்தின் தொடர்ச்சியான நட்டங்கள் மேலும் அதிகரித்து, உரிய சேவையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம், தொடருந்து கட்டணங்கள் திருத்தப்பட வேண்டிய அவசியம் தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திருத்தம் செய்யப்படாத கட்டணம்
கடந்த 5 ஆண்டுகளில் திருத்தம் செய்யப்படாத தொடருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான யோசனை அமைச்சரவையிடம் முன்வைக்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
