கற்பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு!
திருகோணமலையில் பாறைக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக்கைக்குண்டு இன்று மாலை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட அக்போகம பகுதியில் கற்பாறைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் போடப்பட்டிருந்த கருங்கற்பாறைகளுக்குள்ளிருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
அக்போபுர காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் கைக்குண்டினை காவல்துறை விசேட அதிரடைப்படையினரின் உதவியுடன் கந்தளாய் நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் கைக்குண்டினை செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அக்போபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

