ஒரு பிடி சோறூட்ட வேண்டும் என்று 26 வருடங்களாக போராடி வந்த அரசியல் கைதியின் தாய் காலமானார்!
தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் காலமானதாகத் தெரிவிகப்பட்டுள்ளது.
இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் காலமானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்பவரின் தாயான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி என்ற தாயே காலமாகியுள்ளார்.
26 வருடங்களாக தன் மகனின் விடுதலைக்காக போராடியுள்ளார். தன் மகனுக்கு தான் இறப்பதற்குள் ஒரு பிடி சோறூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த அன்னை தன் பிள்ளையின் முகம் காணாமலே விண்ணுலகை அடைந்துவிட்டார்.
இவ்வாறு வடக்கில் தம் உறவுகளை காணாமல் அவர்களுக்காக ஏங்கி கொண்டிருக்கும் பெற்றோர் பலர் எதிர்பார்புகள் நிறைவேறாமலே தம் பிள்ளைகளை மீட்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இறந்து போயுள்ளனர்.
இவர்களுக்கான நீதி இறந்த பின்னரும் கூட இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

