இலங்கை அரசாங்கத்திடம் சரணடைய தயாராகும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்!
மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஏழு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய விரும்புவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த போதைப்பொருள் அதிகாரிகள் ஏழு பேரும் இலங்கை அரசாங்கத்திடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
“முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
தேசிய வேலைத்திட்டம்
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் எங்களுடைய அரசாங்கத்தில் ஜனாதிபதி தலைமையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம்.
தற்போது வரையில் அதிகளவான போதைப்பொருளுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கக்கூடிய ஏழு பேர் தற்போது அதிலிருந்து விலகுவதாக அரசாங்கத்திடம் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. ” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |