சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு அநுர உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் (Shanakiyan Rasamanickam) தந்தையாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி வருகின்றனர்.
இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் தனது 67 ஆவது வயதில் நேற்று முன்தினம் (07) காலமானார்.
அன்னாரின் பூதவுடல் நேற்று (08) பிற்பகல் 2 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நேரில் அஞ்சலி
இந்தநிலையில் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பல அரசியல்வாதிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அன்னாரின் பூதவுடல் இன்று மாலை 6 மணியளவில் பொரளை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








