எரிபொருட்களின் விலைகளில் திடீர் மாற்றம் - புதிய விலை அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Minister of Energy and Power
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Pakirathan
நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 328 ரூபாயாக மாற்றமடைந்துள்ளது.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று 20 ரூபாவால் குறைவடைந்துள்ளதோடு, அதன் புதிய விலை 365 ரூபாயாக மாற்றமடைந்துள்ளது.
அதேசமயம், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 6 ரூபா அதிகரித்து 346 ரூபாயாகவும், ஒட்டோ டீசலின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 308 ரூபாயாக மாற்றமடைந்துள்ளது.
இதேவேளை, மண்ணெண்ணெய் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 236 ரூபாய் என புதிய விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
