முன்னாள் போராளிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் சிறிலங்கா அரசாங்கம்

Government Of Sri Lanka Liberation Tigers of Tamil Eelam
By Vanan May 09, 2023 09:14 AM GMT
Report

விசாரணைகள் என்ற பெயரில் முன்னாள் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், அவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம்

முன்னாள் போராளிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் சிறிலங்கா அரசாங்கம் | Sri Lankan Government Threaten Ex Ltte Members

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு எதிர்வரும் 15ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயமானது, ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளை அரசு இன்னும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்திலே பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு ஜனநாயக வழியில் செயற்படுகின்ற அமைப்புகளை மீளவும் அச்சுறுத்தும் வகையிலே அமைந்துள்ளது.

இவ்வாறான இலங்கை அரசின் முடிவுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஒரு இனத்தின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற நிலையில் ,யுத்தத்தின் பின்னர் பொது வெளிச் செயற்பாடுகளில் ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற போராளிகள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் தொடந்து இவ்வாறான விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்ற விடயம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

அதிலும் முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியில் ஒரு அரசியற் கட்சியாக அமைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்காக அழைப்பதென்பது புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் போராளிகள் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கும் விடயமாகும்.

அதிலும், தற்போதைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலப் பகுதியில் இவ்வாறான அநீதியான விசாரணைச் செயற்பாடு ஜனநாயகத்தைச் நேசிக்கும் பலரையும் கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கையாகும்.

யுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில் இருந்து ஜனநாயக வழியிலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தரப்புகளை இலங்கையின் பயங்கரவாதப் பிரிவு விசாரணைக்கு அழைப்பது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்று.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, சிறிலங்கா இராணுவம் ஏனைய புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக போராளிகளின் வீடுகளுக்குச் செல்வதும், விசாரணை என்ற பெயரில் அழைப்பதும் ஒரு சுமூகமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போராளிகள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்துகின்றது.

விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல்

முன்னாள் போராளிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் சிறிலங்கா அரசாங்கம் | Sri Lankan Government Threaten Ex Ltte Members

இந்த வகையில் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையிலும், அதிபரின் பொது மன்னிப்பின் அடிப்படையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாட்டை ஜனநாயக ரீதியாக நாங்கள் வன்மையகக் கண்டிக்கின்றோம்.

இது போராளிகளின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது.

இவ்வாறான விசாரணைகள் மூலம் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், ஜனநாயக ரீதியில் அவர்களின் செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.

ஏனெனில் எமது மக்களுக்கானதும், போராளிகளுக்குமான ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்தே வருவோம்.

எனவே விசாரணைகள் என்ற பெயரில் இது போன்ற அச்சுறுத்தல்களை இலங்கை அரசு உடன் நிறுத்துக் கொள்ள வேண்டும்” - என்று தெரிவித்தார். 

ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020