தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் சிறிலங்கா அரசாங்கம்..!
இலங்கையில் மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக பெப்ரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தேர்தல் முறைமையில் திருத்தங்களை கொண்டு வருவது அவசியம் என்ற போதிலும் அது தொடர்பான தெளிவான பிரேரணை இதுவரை முன்வைக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மக்களின் இறையாண்மைக்கு பாரிய சேதம்
இலங்கையில் தேர்தலை ஒத்தி வைப்பதன் மூலம் மக்களின் இறையாண்மைக்கு பாரிய சேதம் ஏற்படும் என சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு கருதுவதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு இணங்கவில்லை எனவும் தேர்தல்களை ஒத்தி வைக்காது தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

