அதிக வேலைப்பளுவால் அவதியுறும் சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானிகள்
SriLankan Airlines
Colombo
By Sumithiran
சிறி லங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் எடுத்த பல முடிவுகளால் விமானிகள் அதிக வேலைப்பளுவுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை விமானிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களை முழுமையாக இயக்குவதற்கு நிறுவனத்திற்கு குறைந்தது 330 விமானிகள் தேவைப்படுவதாகவும், ஆனால் 2022-2023 ஆம் ஆண்டில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட விமானிகள் விமான சேவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
மிகக் குறைந்த சம்பளம்
மேலும், இலங்கை விமானிகளுக்கு தொழில் தரத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் தமது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளனர்.


