முக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொள்ள பிரித்தானியா பயணமானார் அதிபர் ரணில்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இம்மாதம் 6ம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிபர் ரணில் இன்று பிரித்தானியாவிற்கு பயணமானார்.
அதிபருடன் இரண்டு பணியாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முடிசூட்டு விழா
வரலாற்று சிறப்புமிக்க வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சனிக்கிழமை நடைபெறும் முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
1953 ஆம் ஆண்டு நடைபெற்ற மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் சுமார் 8,200 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது நடைபெறும் மன்னர் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலாவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள 2,200 விருந்தினர்கள் மாத்திரம் அழைக்கப்பட்டுள்ளதுடன், அதில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராவார்.
பழமையான புதிய மன்னர்
சென்ற வருடம் செப்டம்பரில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறினார்.
இதன்மூலம், அவர் பிரித்தானிய வரலாற்றில் மிகவும் பழமையான புதிய மன்னராக இடம்பிடித்தார்.
