நோர்வேயில் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த முதன்மை பொறுப்பு
நோர்வேயின் கால்பந்தாட்ட கழகமொன்றின் முதன்மை பயிற்சியாளராக இலங்கை தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டடுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் கழகத்தின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது தற்காலிக முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என கழகம் அறிவித்துள்ளது.
ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சியை பெற்ற சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு குறித்த கழகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழர்
ஐரோப்பிய நாடுகளின் முதல்தர கால்பந்து கழகத்தின் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற முதல் இலங்கை தமிழர் இவர் தான் என்பது ஆச்சிரியத்திற்குரியது.
டென்மார்க்கில் பிறந்த இவர் பத்தாண்டுகளுக்கு மேலாக டென்மார்க்கின் சூப்பர் லிகா தொடரின் ஏசிஎஃப் கிளப்பின் 10 வயது முதல் 19 வயது வரையிலான ஜூனியர் அணிகளுக்கான பயிற்சியாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.