தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த முடிவு!!
முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு 5.42 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின், 5 பயனாளிகளுக்கு உதவி வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்,
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகவும், ஊரடங்கு காலத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியேயும் வசித்து வருகின்றார்கள்.
அவர்கள் சிறு தொழில்கள், தினக்கூலிப் பணிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.