இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம்
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்து வருடத்திற்கு முன்னர் சென்ற சாமி
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த சாமி, நிரந்தர பாதுகாப்பு விசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இறுதிவரை அந்த விசா கிடைக்காத நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் நண்பர்கள் தெரிவித்தனர்.
இதுவரை கிடைக்காத நிரந்தர விசா
சாமியின் மனைவியும்,மகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களைப் பார்த்துக்கொள்ளவென அவர் கடினமாக உழைத்ததாகவும், தனக்கான பாதுகாப்பு விசா கிடைத்த பின்னர், அவர்களையும் அவுஸ்திரேலியா அழைப்பதற்கு அவர் விரும்பியதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, சாமியின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 19 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)