யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் :பலர் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில்(jaffna) ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல இடங்களில் மக்கள் பாதிப்பு
உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/279 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 5பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 3பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/426 கிராம சேவகர் 1 குடும்பத்தை சேர்ந்த 4பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



