கோட்டாபய முதல் பிள்ளையான் வரை அதிரும் சுரேஸ் சாலேயின் கைது!
உலகத்தையும் இன்னும் சிலவாரங்களில் ஈஸ்டர் எனப்படும் உயிர்த்த ஞாயிறு பண்டிகை கடக்கவுள்ள நிலையில் இலங்கையில் 2019 ஏப்ரல் மாதத்தில் இதே போன்ற ஒரு ஈஸ்டர் நாளில் உலுக்கத்தை ஏற்படுத்தி குண்டுத்தாக்குதல் தொடர்பான சதிகளுடன் பலமாக கிசுகிசுக்கபட்ட சுரேஷ் சாலே, இன்று சிறிலங்கா சீ.ஐ.டியினரால் அதிரடியான தூக்கப்பட்டுள்ளமை புதிய பரபரப்புகளுக்கு வித்திட்டுள்ளது.
சிறிலங்கா புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குனரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் படைய முகமுமான இந்த சாலே ராஜபக்ச அதிகார மையத்தை இலங்கையில் மீண்டும் கொலுவிருத்துவதற்காக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சதியை செய்ததாக கிசுகிசுப்புகள் உட்பட அவரை மையப்படுத்திப ல பரபரப்புக்குகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
இந்த பரபரப்பை உறுதிப்படுத்துவது போல கோட்டாபாய அரசதலைவராக பதவியேற்றபின்னர் சிறிலங்கா தேசிய புலனாய்வு சேவையின் தலைவராக சலே அசாதாரணமாக நியமிக்கப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெறுவதற்கு முதல்வருடமான 2018 இதே போன்ற ஒரு பெப்ரவரி மாதத்தில் இதே சுரேஸ்சாலே புத்தளம் பகுதியில் வைத்து ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக பின்னர் அடையாளப்படுத்தபட்ட சஹ்ரான் உட்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் முகங்களை சந்தித்தான பரபரப்பு செய்தி இதில் முதன்மையானது.
அடுத்தது தற்போது உள்ளேயுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகிய பிள்ளையானின் முன்னாள் சகபாடியும் அவரது கட்சியின் செயலாளராகவும் இருந்த அசாத் மௌலானா சுவிசில் வைத்து சுரேஷ் சலேக்கும் பிள்ளையானுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக குறிப்பிட்ட விடயம உள்ள நிலையில் பல ஊகங்கள் மற்றும் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்தவிடயங்கள் உட்பட்ட பல விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |