கனடாவில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த முக்கிய பதவி
Sri Lanka
Canada
By Pakirathan
கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக துஷாரா வில்லியம்ஸ் என்ற இலங்கை பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் பொதுச் சேவையில் பங்கு பற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர் எனும் பெருமையை வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் பிறந்த துஷாரா வில்லியம்ஸ், தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு மகளீர் கல்லூரியில் பயின்றுள்ளார்.
துஷாரா வில்லியம்ஸ்
இதன் பின்னர் 1991 ஆம் ஆண்டளவில் கனடாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.
துஷாரா வில்லியம்ஸ் சிறிது காலம் இலங்கையில் உள்ள கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
