வெளிநாடொன்றில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கையர்
Sri Lanka
South Korea
By Dhilak
தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர் தங்கி இருந்த அறையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவமானது, கடந்த 3ம் திகதி அதிகாலை வேளை நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரால் இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
தாக்குதலில் உயிரிழந்த நபர், பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி. கே. ஷெனித் துலாஜ் சதுரங்க 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் ஆவார்.

மேலும், சதுரங்கவை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |