இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் : வெளியானது அறிவிப்பு
Sri Lanka
Israel
Foreign Employment Bureau
Israel-Hamas War
By Jaso
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதை அடுத்து காசா மீது பெரும்போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது இஸ்ரேல் படை.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அடுத்து பல நாடுகளைச் சேர்ந்நவர்கள் கொல்லப்பட்டனர்.இதில் இலங்கை பெண்ணொருவரும் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலில் உள்ள ஏனைய இலங்கையர்கள்
இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள ஏனைய இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவதானம்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
