படகு மூலம் வெளிநாடு தப்பி செல்ல முயற்சி - 6 பேர் கைது..!
Refugee
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குழுவொன்றை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார், இஸ்மோக்கன் துறை முனைக்கு அருகில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆண்கள் நால்வரையும் இரண்டு பெண்களுளையும் மன்னார் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
கைது செய்யப்பட்டவர்களில் 7 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் 16 வயதுடைய சிறுமியொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய படகின் சாரதியும் அடங்குவார்.
இந்தக் குழுவினர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி