அரசு ஊழியர்களுக்கு முன்னாள் எம்.பி. விடுத்துள்ள கோரிக்கை
கடந்த காலங்களில் அஞ்சல் மூலமாக வாக்கு சீட்டுகள் நிராகரிக்கப்பட்டு இருப்பதால் அரசு ஊழியர்கள் தமது தபால் மூல வாக்குகளை முறையாக அளிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியன் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuthu Srineshan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) - களுவாஞ்சிகுடியில் (Kaluwanchikudy) நேற்றையதினம் (21.10.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், வாக்களிப்பது என்பதைவிட உங்களது வாக்குச் சீட்டுக்களை நிராகரிக்க செய்வதற்கு ஏற்ற விதத்தில் சில மோசடிகளும் நடைபெறுவதுண்டு.
வாக்கு சீட்டுக்கள்
அந்த வகையில் அந்த வாக்குப் பதிவு நடைபெற்ற பின்னர் தபால் உறையில் போடப்பட வேண்டும். அதன் பின்னர் அதற்குரிய ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாதவிடத்து அந்த வாக்கு சீட்டுக்கள் வெளியில் எடுக்கப்பட்டு சில மோசடிகள் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றன.
உண்மையில் கட்சி முகவர்கள் இந்த விடயத்தில் கவனமாக செயற்பட வேண்டி இருக்கின்றது. என்பதை கூறிக் கொள்கின்றேன்.
தேர்தல் பரப்புரை
கடந்த 2020 தேர்தலில் ஏற்பட்ட சில முறையீடுகள், மோசடிகள் பற்றிய படிப்பினை காரணமாக இந்த விடயத்தை கூறிக்கொள்கின்றேன்.
மேலும் நீங்கள் அளிக்கின்ற வாக்குகள் தமிழரசு கட்சிக்கான வீட்டுக்கு சின்னத்துக்கும் எனது ஆறாவது இலக்கத்திற்கும் அளிக்குமாறு வேண்டும் என மிகவும் உரிமையுடனும் வினையமாக கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நேரத்தில் பரப்புரை காரணமாக நீங்கள் தவறான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது. இந்த பரப்புரையின்போது வாக்குகளை ஈர்த்துக் கொள்வதற்காக மதுசாரம், இலஞ்சப் பணம், உணவு பார்சல், போன்ற சலுகைகளை கையூட்டலாக வழங்கி உங்களுடைய வாக்குகளை களவெடுத்துக் கொள்வதற்கு அல்லது வசீகரித்துக் கொள்வதற்கு விரும்புகின்றார்கள்.
ஊழல் மோசடி
எனவே இந்த விடயத்தில் நீங்கள் அவ்வாறான மோசடியானவர்களின் வலைகளிலிருந்து தப்பி பிழைக்க வேண்டும். தற்போது கள்ள நோட்டுக்களைக் கூட அடித்து வைத்திருக்கின்றார்கள்.
கள்ள நோட்டுகளை அடிப்பவர்கள் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், அவர்களும் குறிப்பிட்டதொரு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் கள்ளநோட்டுகளை தந்தும் கூட உங்களுடைய வாக்குகளை காவு கொள்வதற்கு சில கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே இவ்வாறான குற்ற செயல்கள் செய்கின்றவர்களில் கட்சிகளின் மீதும் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
தயவு செய்து ஊழல் மோசடி இலஞ்சம் கையூட்டு இல்லாத ஒரு மதுசார பாவனை இல்லாத ஒரு தேர்தலுக்கு உங்களை தயாராகிக் கொள்ள வேண்டும் என நேரத்தில் ஆலோசனையை தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |