வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப்பதி அருள்மிகு ஸ்ரீ பரமசிவன் கதிரேசன் ஆலய பெருந்திருவிழா
வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப்பதி அருள்மிகு ஸ்ரீ பரமசிவன் கதிரேசன் ஆலயம் கந்தசாமி கோவில் இவ்வருட பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
23 - 6 - 2023 வெள்ளிக்கிழமை மாலை விநாயகர் வழிபாடு பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி 24 - 6 - 2023 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பெருந்திருவிழா சிறப்பாக ஆரம்பித்திருந்தது.
புதிதாக கொடித்தம்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதலாவது பெருந்திருவிழா ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
பூஜை வழிபாடுகள்
குருநாதர் விப்ரஸ்ரேஷ்டர் இணுவில் மஹாதேவ குருக்களினது பாதம் பணிந்து ஆலய ஸ்தானீக குருமார் சார்பிலும் நல்லாசிகள் வேண்டி பரமசிவன் கதிரேசன் ஆலய ஸ்தானிக சிவாச்சாரியார்களான சிவாகம ஞான பானு சிவஸ்ரீ ச.குமாரசுவாமி குருக்கள் சிவஸ்ரீ கு.வைத்தீஸ்வர குருக்கள் தேகாந்த் நிலையில் ஆசிகள் வழங்கினார்.
பின்னர் சிவஸ்ரீ வி. கஜேந்திரக்குருக்களின் கிரியார்த்தினத்துடன் இந்துக்குருமார் அமைப்பின் ஸ்தாபகரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் தலைமையில் மாணவர்களின் திருமுறை விண்ணப்பத்தோடு கலை நிகழ்ச்சிகள் சமர்ப்பணம் செய்யப்பட்டு அடியவர்களுக்கு ஆசி வழங்கப்பட்டது.
தொடர்ந்து மகேஸ்வரர் பூஜை நடைபெற்று அன்னதானத்துடன் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
எதிர்வரும் 05.07.2023 வரை உற்சவங்கள் நடைபெறவுள்ளத்துடன் மருதங்கேணிபதி பரமசிவனின் திருவருள் கூடியிருக்கின்றது.
