ரணிலுடன் நேரடி விவாதத்திற்கு தயார் : சவால் விடுத்துள்ள அநுர
ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) முன்வைக்கும் பொருளாதார கேள்விகள் தொடர்பில் நேரடி விவதாம் ஒன்றை ஏற்பாடு செய்து ரணிலுடன் பொருத்தமான இடத்தில் கலந்துரையாட தயார் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (12) மாத்தறையில் (Matara) இடம் பெற்ற தேர்தல் பிராச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலக்கு என்றால் என்னவென்று ரணில் சவால் விடுத்துள்ளார்.
நேரடி விவாதம்
வெலிமடை (Welimada) மேடையிலும் மற்றும் அம்பலாந்தோட்டை (Ambalantota) மேடையிலும் அவர் இது தொடர்பில் கேள்வியெழுப்பி இருந்தார்.
அவர் எங்கோ ஒரு இடத்தில் கேள்வியெழுப்புகின்றார் நான் எங்கோ ஒரு மேடையில் இருந்து பதிலளிக்கின்றேன்.
ஆகவே இவ்வாறு இல்லாமல் நேரடி விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்தால் கலந்துரையாட நான் தயார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேடையில் பொருத்தமற்றவற்றை பேசும் சஜித் பிரேமதாச தொடர்பில் பேசி பயன் இல்லையென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |