வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - 20 வயது இளைஞன் உயிரிழப்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By pavan
ஹொரணை - இங்கிரிய வீதியில் கிரிகலஹேன பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
ஹொரணையில் உள்ள அரச பாடசாலையொன்றின் விளையாட்டுப் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
20 வயதுடைய இளைஞன்
லொகு கங்கணம்ல டொன் ஷகில கிரிஷாந்த என்ற 20 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகான் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதி தற்போது இங்கிரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி